Sunday 25 August 2013

காதல் கடிதங்கள் :

பேப்பர் ராக்கெட் மூலமா நெனச்ச இடத்தை   அடைகிற நுட்பத்தை கைதேர்ந்து பழகிய பின் , சோதனைக்கு தயாரானேன் ...! ஆளில்லா  இடங்களில் தான் பெரும்பாலும் ராக்கெட் சோதனைகள் நடைபெறும் ..மக்களுக்கு  எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக...! என் ராக்கெட் சோதனையும் அப்படி தான் , ...! எனக்கு எந்த பாதகமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக..!

லாவண்யா ...! நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது , என் பள்ளியில்  இணைந்தாள் ...! ஒரு சிறு சீரக மிட்டாயை மறைக்கும் அளவுக்கு அளவான கன்னக்குழிகள் அவள் சிரிக்கும்போது எட்டிப்பார்க்கும்..!அந்த குழிகளை தொட்டு பார்க்கவேண்டும் என்று எனக்கு தீரா ஆசை...! கூந்தல் பழ  பழ  என்று என்னை தேய்த்து படிகாரம் போல் மின்னும்..! பளிங்கு கற்கள் போல் கூந்தல் அடர்த்தி ..! அந்த கூந்தலின் சிறு பகுதிகளை முகத்தில் விட்டிருப்பாள் , அது அந்த கன்ன குழிகளில் கொஞ்சி விளையாடும்...! என் உள்ளத்தின் முதல் காதல் அந்த கூந்தல் தான் ...!

நான்தான் வகுப்பு காவலன்...! ஆசிரியர் இல்லாத நேரங்களில் வகுப்பில் யாரும் பேசாமல் கட்டி காக்க வேண்டும் ...!என்னை ஒரு கண்டிப்பான அதிகாரி போல் பாவித்துக்கொள்வேன் ...! அதிகமாக பேசும் மாணவர்களின் பெயர்களை , வகுப்பின் கரும்பலகையில் எழுதி , அவர்கள் பேசும் அளவிற்கு ஏற்ப பெருக்கல் குறிகளை அதிகமாக்கி  , வாத்தியாரிடம் போட்டு கொடுக்கும் ஒரு கேவலமான  வேலை...!

அவள் ஒரு வாயாடி .,ஆசிரியர் இல்லாதபோது தன் சிங்கப்பூர்  மாமா வின் புகழ்களையும் . தான் திருப்பதி சென்று வந்த அனுபவங்களையும் , தனது சக தோழிகளிடம் அடுக்க   ஆரம்பித்துவிடுவாள் ...! ஆனால்  அவளுடைய பெயரை மட்டும் நான் குற்றப்பத்திரிக்கையில் எழுதாமல் என்   அன்பை வெளிப்படுத்துவேன்...!குழிகள் குவிய சிரிப்பாள் ...!குதூகலத்தில் மிதப்பேன்..! எனக்கெதிராக வகுப்பு மாணவர்கள் ஒரு புரட்சி படையே தொடங்கினார்கள் ...!

என் பாட்டியின் மடியில் படுத்து பார்க்கும் ஒவ்வொரு படங்களிலும் வரும் காதல் காட்சிகளை அர்த்தமே தெரியாமலும் கூட ரசித்தேன் ..! சில படங்களில்
தன் காதலை கதாநாயகர்கள் காகிதத்தில் எழுதி ராக்கெட் பறக்க விடுவதை மனதில் ஏற்றி சோதனைக்கு தயாரானேன் ..!

பள்ளி முடிந்து வீடு செல்லும் வழியில் , யாரும்  இல்லாத நேரத்தில் ,
சரியான முறையில் ராக்கேட்டை மடித்து , சிறு நடுக்கத்துடன் , கைகளில் முறையே பொருத்தி , அவளை நோக்கி சரியான முறையில் செலுத்தினேன் ..!

உள்ளே நாலைந்து பாட்டு புத்தகங்களின் பாடல் வரிகளும், ஐ லவ் யூ ..என்ற வாசகத்தையும் எழுதியிருந்தேன் , உபயம் :பக்கத்துக்கு வீட்டு அண்ணன்..!

என் தொழில் நுட்பம் தோற்கவில்லை , சீரான வேகத்தில் பறந்த  ராக்கெட் , எனக்கு அவளிடம் மிகவும் பிடித்த கூந்தலை அடைந்து சிக்கிக்கொண்டது..!

ஏதோ அவள் தலையை மோதிவிட்டது என்ற பரபரப்பில் அவள் தன கூந்தலில் சிக்கியதை வேகமாக பிடித்து இழுத்தாள் ...!என்னை நோக்கி திரும்பினாள் ...!............................................................................................................................................................................................................................................................................................................................................... அவளது கூந்தல் , அழகு கூந்தல் , சிக்கிய ராக்கெட்டுடன் தரையில் கிடந்தது ...! என் ஆறாவது அறிவு அது ஒட்டு முடி என்பதை உணர ஆரம்பித்தது ...!..............................................................................................................................................................................ராக்கெட்டை விட வேகமாக ஓடினேன்...!  திருப்பதிக்கு மொட்டை போட்டிருக்கின்றாள் ...! அவளது நம்பிக்கையில் அவள்  வேண்டுதலை நிறைவேற்றிய அவளது கடவுள் , என் கனவில் ஓட்டை போட்டுவிட்டார்...!

                                                                                                            -கா .வாசிம் அகமது

2 comments:

  1. hahahaha mottaila mudi nu heading koduthu irukalaam....rckt muyarchikku vaalthukkal

    ReplyDelete
    Replies
    1. u r my inspiration fa ds story macha,...really da...! thank u macha

      Delete