Saturday 31 August 2013

வியாசர்பாடியில் அந்த ஒரு இரவு:
எங்கேயோ  கேட்கும் நாயின் கோரமான சத்தமும்  , நிசப்தமான இரவு நேரத்தில் கேட்கும் ஒரு பெண்ணின் அழுகுரலும் , நம்மை யாரோ பின் தொடர்கிறார்களோ என்று நினைக்க தோணும் தனிமையான இரவு நடைபயணங்களும் , "அந்த ஒரு இரவை " எனக்கு நினைவில் கொண்டுவராமல் இருந்ததில்லை ...!

அது நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் நேரம் .. ,  இரண்டாம் ஆண்டின் தேர்வு முடிவுகள் இன்றோ, நாளையோ வரப்போகிறது என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம்...!
அப்போது என் கணக்கில் 6 அரியர்கள்  இருந்தது ..தேர்வு முடிவுகள் வந்ததும் இன்னும் எத்தனை என் கணக்கில் ஏறப்போகிறதோ என்று வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்த நேரம் ...

என் நண்பர்கள்  சரவணன், சபரி , ஷமீர்-னு ஒரு 12 பேர் கொண்ட   ஒரு கூட்டம் இருந்தது ...அந்த கூட்டத்தில் அனைத்துமே நீர்ப்பறவைகள் , என்னையும் சேர்த்து ஒரு இரண்டு பேர் சரக்கு அடிக்க மாட்டோம் , ஆனாலும் புகைவண்டிகளாக இருந்தோம் ..அவர்கள் சரக்கு அடிக்கும் நேரம் நாங்கள் மூவரும் தின்பண்டங்களை தின்று  கொண்டு , புகையை விட்டுக்கொண்டு இருப்போம் .".சரக்கு அடிக்குரவங்க சில பேரு  தம்  அடிக்க மாட்டாங்க ,,ஆனால் தம் அடிக்குரவங்க  எல்லாருமே சரக்கு அடிப்பாங்க என்று ஒரு பேக்டு உண்டு ..நாங்கள் அதை உடைத்து தூள் தூளாக்கியவர்கள்  ..!

எங்கள் கூட்டத்தில் எனக்கும் , சரவணனுக்கும் முதலாம் ஆண்டிலிருந்தே ஒரு போட்டி உண்டு... எனக்கு 2 இருக்கும்போது அவனுக்கு 4 .., எனக்கு 6 இருக்கும்போது  அவனுக்கு 5.., எனக்கு 8 இருக்கும்போது அவனுக்கு 6 .., அரியர் என்னிக்கையதான் சொல்றேன் ..எனவே இன்னிக்கு தேர்வு முடிவு வந்தால் யாருக்கு அதிகமான அரியர் , மொத்த எண்ணிக்கையில் நான் குறைவேனா , அவன் குறைவானா என்று எங்களுக்குள் ஒரு பனிப்போர் மூண்டு கொண்டிருந்தது ..

விடுதியில் எனது அறையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது , வியாசர்பாடியை சேர்ந்த நண்பன் ரமேஷின் போன் வந்தது , எதிர்முனையில் " மச்சா , வீட்ல எல்லாரும் பக்கத்து ஊரு கோவில் திருவிழாக்கு போய்ட்டாங்க ...கைல காசு இருந்தா 4 புல்லு வாங்கிட்டு உடனே எல்லாரும் வந்துடுங்க ..நான் காச தந்தரேன் ..இன்னிக்கு என் ட்ரீட் ..." என்று கூறினான் ..! சனிக்கிழமை 9 மணிக்கு போன கரென்ட் 5 மணிக்கு வந்த எப்டி இருக்குமோ அப்டி இருந்துச்சு ...! அப்போது மணி சரியாக மாலை 6 மணி ..இரவு படர்ந்து கொண்டிருந்தது ..சரக்கு வாங்கிக்கொண்டு  கிண்டியில் இருந்து வியாசர்பாடியை நோக்கி கிளம்பினோம் ..சரவணன் மட்டும் வரவில்லை , அவன் சொந்த ஊர் கள்ளகுறிச்சி என்பதால் வார வாரம் அங்கு  சென்றுவிடுவான் ..! இருசக்கர வாகனத்தில் சென்றோம் .

வியாசர்பாடி வடசென்னையின் பேட்டை என்றும் ,அது பிரபல ரௌடிகளின் புகலிடம் என்றும் ,வாய் வழி செய்தியாக நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் ..,
சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரில் உள்ள ஒரு பாலத்தில் நின்றுகொண்டு ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் , வியாசர்பாடி எப்படி செல்வது என்று கேட்டோம் ..
அந்த ஓட்டுனர் சென்ட்ரல் ஸ்டேசனின் வலது மற்றும் இடது புறத்தில் உள்ள இரு சாலைகளை காட்டி இந்த இரண்டு வழியாகவும் செல்லலாம் என்று கூறினார் ..ஆட்டோ-வின் உள்ளே இருந்து ஒரு வெண்கலக்குரல் எட்டிப்பார்த்தது .., " கண்ணு மணி 8 ஆகிடுச்சு , இந்த வழியாக போக வேண்டாம் " என்று இடது பக்க வழியை காட்டிய ..அந்த நடுத்தர வயதை ஒட்டிய திருநங்கை அம்மாவின்  முகத்தில் ஒரு கனிவை கண்டேன் .., பெரும்பாலும் திருநங்கைகளை கண்டு அஞ்சும் நான் , அந்த கனிவான அம்மாவை பார்த்து புன்னகைத்தேன் ..!
ஆனாலும் அப்படி அந்த பாதையில் என்னதான் இருக்கிறது என்று  பயம் கவ்விக்கொண்டது ..

அந்த பாதையின் முடிவில் இரண்டு பாதைகள் பிரிந்தது ...அதில் எதில் திரும்புவது என்று ரமேஷிடம் போன் பண்ணி கேட்டோம் ..அவன் சொன்னவாறு திரும்பிவிட்டு , எதுக்கும் உறுதி செய்வதற்காக ஒரு பெரியவரிடம் " அய்யா . லட்சுமி நகர் இப்டியா போகணும் " என்று வினவினோம் ..அவர் " ஆமா தம்பி இப்டிதா போகணும் . ஏன் இந்நேரத்துல அங்க போறீங்க , நேத்து அங்க ஒரு ஆள மட்டர் பன்னிட்டானுங்க " என்று கூறினார் .. மேலும் அல்லு கெளம்பியது .. எனினும் இன்று சரக்கு ரமேஷ் வீட்டில் அடித்தே ஆகவேண்டும் என்று தொடர்ந்தோம் ..!

இறுதியாக வியாசர்பாடி லட்சுமி நகரை அடைந்தோம் ..மணி 8.30 இருக்கும் , ஆனால் தெரு விளக்குகள் எரியாமல் பேரிருள் சூழ்ந்திருந்தது .,கூட்டம் கூட்டமாக இளசுகளும் , பெருசுகளும் பேசிக்கொண்டிருந்தார்கள் .. எங்களை வித்தியாசமாக பார்த்தனர் ..ரமேஷ் வந்து எங்களை அவன் வீட்டுக்கு அழைத்து சென்றான் ..

வீட்டை அடைந்ததும்  ரமேஷ் எங்களை நோக்கி  " மச்சான் , அமைதியா உள்ளே வாங்கடா.. வண்டிய அங்க நிறுத்துங்க ... சத்தம் போட்டு பேசாதீங்க , நேத்து அங்க ஒரு மட்டர் ஆயிடுச்சுடா , " என்று தன் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளியிருந்த ஒரு வீட்டை நோக்கி கை காட்டினான் .., அங்கு பார்த்துக்கொண்டே  நுழைந்தோம்  

பிளாஸ்டிக் க்ளாஸ்களில் முறையே சரக்கை சரியான அளவில் ஊற்றி , பெப்சி-யை சரியான விகிதத்தில் கலந்து , சியர்ஸ் என்ற உற்சாக வார்த்தையுடன்  மது அருந்த தொடங்கினார்கள் ., மூன்றாவது  ரவுண்டு போய்க்கொண்டிருந்தது .., நாங்கள் மூவரும் சிகரெட்டை எடுத்து பற்றவைக்க தயாரானோம் ..., ஒரு பெரும் அலறல் சத்தம் எங்களுக்கு மிக அருகில் கேட்டது ..அது கண்டிப்பாக மனிதனின் அலறல் சத்தம் போல் இல்லை ..ஆனால் அது மிருகத்தின் சத்தம் போலும் இல்லை ..,சிகரெட்டை பற்றாமல் நாங்கள் பெருமூச்சு வாங்கியவாறு , ஒருவரை ஒருவர் பார்தோம் ..மணி 11.30 இருக்கும் ..போதையில் இருந்த நண்பர்கள் அந்த  சத்தத்தை பெரிதாக கவனிக்கவில்லை..நாங்கள் மூவரும் அறையை விட்டு வெளியே வந்து வீட்டின் கதவை  திறந்து  வெளியே பார்த்தோம் ...............

எனக்கு சிறு வயதில் இருந்தே அமானுஷ்ய சக்திகளின் மீது அதிகமான ஆர்வமும் , அதைவிட அதிகமான பயமும் உண்டு,., அதற்கு என் பாட்டியை கூட ஒரு காரணமாக சொல்லலாம் .., சிறு வயதில் சாப்பாடு ஊட்டி விடும்போது சரியாக சாப்பிடாவிட்டால் , மாடிப்படியை நோக்கி கை காட்டி "அங்கிட்டு கண்ணு நிக்குது லே .." என்றும் கொல்லையை நோக்கி " அங்கிட்டு கொள்ளிவாய் பிசாசு சுத்துது லே " என்றும் கூறி பயமுறுத்தி சோறை மசிச்சு வாயில் திணிப்பாள் ..அப்போது   தொற்றிக்கொண்டது  எனக்கு பயம் ..,   விடலையாக  வளர்ந்த பின்னர் கூட பின்புற கொல்லைக்கும் , சமயல்கட்டுக்கும் இரவு நேரங்களில் போவதை   தவிர்த்தேன் .., இரவு நேரங்களில் ஒன்னுக்கு முடுத்தாலும் அடக்கிக்கொண்டு காலை வரை பொரண்டு கொண்டிருப்பேன் ..இல்லாட்டி அம்மாவை எழுப்பி கூட்டிக்கொண்டு போவேன் ..பெரிதாக வளர்ந்தாலும் அந்த அச்சம் தொடர்ந்தது .., வெவ்வேறு இடங்களில் நடக்கும் அமானுஷ்ய சக்திகள்ளல் நடக்கும் அசம்பாவிதங்களாக நண்பர்கள் கூறும் கதைகளை நம்பினேன் .பகல்களில் விரும்பி விரும்பி பேய் கதை கேட்பேன் .., இரவில் அஞ்சி துயில் கெடுவேன் ..,

இப்படிப்பட்ட எனக்கு இந்த சத்தம் , அடிவயிற்றில் அடி சாயா போட்டது ...! " மச்சா வாடா வெளில போய் பார்க்கலாம் " என்று   சபரி என் கையை இழுத்தான் ..,நான் பயத்தை கண்களில் காட்டாமல் " ம்ம்ம் ..வாடா பாக்கலாமே " என்றேன்.. என் போனில் குறுஞ்செய்திக்கான சத்தம் வந்தது பீப் என்று ...
                                  
                              mech.saravanan : macha. anna university u.g result may /june 2010 came...(11.50PM)
                                                  me: ennada solra ..? seekkirama parthu solluda ..?(11.51PM)
                              mech.saravanan :in my native net is sema slow...wait da...!(11.55PM)

"மச்சா சபரி , இந்த பயம் போதாது-னு  ரிசல்ட் வேற வந்துடுச்சு டா ..." சரோ இப்பதா மெசேஜ் பன்னாண்டா ...! (கரென்ட் போனது .) (12.00AM)(கும்மிருட்டு )

மீண்டும் அந்த பெரும் சத்தம் முனங்குவது போல் கேட்டது ...! பயத்தில் , " மச்சா , தம் எடுடா ." நான்  சிகரெட்டை பற்றவைக்க , தீப்பட்டியில் குச்சியை உரசி நெருப்பை சிகரெட்டில் வைத்தோம் .., சிகரெட்டின் முன்பகுதி எரியாமல் . வாயில் வைக்கும் "பட் " பகுதி எரிந்தது ..., 
"மச்சா பயத்துல சிகரட்ட கூட தப்பா  பத்தவைக்கிரியேடா""
இன்னும் ரெண்டு தா இருக்கு , ஒழுங்கா பத்த வை -னு " ,  சபரி இன்னொரு சிகரெட்டை தந்தான் ..,
போனில் உள்ள விளக்கை எரியவைத்து . ஒழுங்கான முறையில் வாயில் வைத்து பற்றவைத்தேன் , மீண்டும் பட் பகுதி எரிந்தது ..
கோபத்தில் சபரி , என் தலையில் தட்டி " என்னடா ஒழுங்கா  பத்த வைக்க குட தெரியல "
நான் " மச்சா , நான் ஒழுங்கா தா பத்த வச்சேன் டா. .."எனக்கு செம பயமா இருக்கு டா .. 
சிகரெட்டின் பட் பகுதி எறிந்தால் , அதை மீண்டும் வாயில்  வைத்து  புகைக்க முடியாது , நாற்றம் அடிக்கும் ..இதுதான் சபரியின் கோபத்திற்கு காரணம் ..

மிச்சமிருந்த ஒரு சிகரெட்டை , சபரி பற்றவைத்தான் ,மீண்டும் அவ்வாறே எரிந்தது ..! பயத்தில் மூவரும் மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க கதவை மூடிவிட்டு உள்ளே ஓட முயற்சித்தோம் .., கதவை எவ்வளவு இழுத்தும்  மூட முடியவில்லை , யாரோ எங்களை நோக்கி நடந்து வருவது போல் சத்தம் கேட்டது , எதிரே பார்த்தால் ஒரு நிழல்  எங்களை நோக்கி வந்தது . , பயத்தில் "டேய்ய் ய் ய் ய்  , ரமேஷு" என அலறினோம் ....வெளியே வந்த ரமேஷு , "டேய் , இது நேத்திக்கு செத்த குமாரு டா ஆ ஆ ஆ ஆ " என்று அலறியவாறே மயங்கி விழுந்தான் ...10 அடி  தொலைவில் அந்த நிழல் எங்களை நெருங்கி கொண்டே வந்தது ............................ போன் ஒலித்தது ...mech.saravanan callinngggg.......

                  சரவணன் : மச்சா , ரிசல்ட் பார்த்துட்டேன் டா ( சோகமாக )
                            நான்  : ஓ *****  , சொல்லி தொலடா ( கோபத்துடன் )
   நிழல் மிக அருகில் வந்தது .. மற்ற இரண்டு நண்பர்கள் மயங்கினர் .........

                   சரவணன் : எனக்கு  மொத்தமா 14 அரியர் டா   ..........
                             நான் : எனக்.......கு .........?
     நிழல் மிக மிக அருகில் பெரும் சத்தத்துடன் வந்தது .....................
                   சரவணன் : உனக்கு மொத்தம் 4 தாண்டா ... 8 ல இருந்து  4 குறைச்சிருக்க ... கெத்து டா மாப்ளே  .............!!!!!!!!!!!!!!!!
                    நான் ..:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


பெரும் சந்தோஷ கூச்சலுடன்  , எதிரே வந்த ஆவியை நோக்கி ஓடினேன் .....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஆவியை கூட எதிர்க்கும் சக்தி நள்ளிரவில் வரும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுமுடிவுகளுக்கு உண்டு ...!
                                                                               
                                                                                     கா.வாசிம் அகமது


Sunday 25 August 2013

காதல் கடிதங்கள் :

பேப்பர் ராக்கெட் மூலமா நெனச்ச இடத்தை   அடைகிற நுட்பத்தை கைதேர்ந்து பழகிய பின் , சோதனைக்கு தயாரானேன் ...! ஆளில்லா  இடங்களில் தான் பெரும்பாலும் ராக்கெட் சோதனைகள் நடைபெறும் ..மக்களுக்கு  எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக...! என் ராக்கெட் சோதனையும் அப்படி தான் , ...! எனக்கு எந்த பாதகமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக..!

லாவண்யா ...! நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது , என் பள்ளியில்  இணைந்தாள் ...! ஒரு சிறு சீரக மிட்டாயை மறைக்கும் அளவுக்கு அளவான கன்னக்குழிகள் அவள் சிரிக்கும்போது எட்டிப்பார்க்கும்..!அந்த குழிகளை தொட்டு பார்க்கவேண்டும் என்று எனக்கு தீரா ஆசை...! கூந்தல் பழ  பழ  என்று என்னை தேய்த்து படிகாரம் போல் மின்னும்..! பளிங்கு கற்கள் போல் கூந்தல் அடர்த்தி ..! அந்த கூந்தலின் சிறு பகுதிகளை முகத்தில் விட்டிருப்பாள் , அது அந்த கன்ன குழிகளில் கொஞ்சி விளையாடும்...! என் உள்ளத்தின் முதல் காதல் அந்த கூந்தல் தான் ...!

நான்தான் வகுப்பு காவலன்...! ஆசிரியர் இல்லாத நேரங்களில் வகுப்பில் யாரும் பேசாமல் கட்டி காக்க வேண்டும் ...!என்னை ஒரு கண்டிப்பான அதிகாரி போல் பாவித்துக்கொள்வேன் ...! அதிகமாக பேசும் மாணவர்களின் பெயர்களை , வகுப்பின் கரும்பலகையில் எழுதி , அவர்கள் பேசும் அளவிற்கு ஏற்ப பெருக்கல் குறிகளை அதிகமாக்கி  , வாத்தியாரிடம் போட்டு கொடுக்கும் ஒரு கேவலமான  வேலை...!

அவள் ஒரு வாயாடி .,ஆசிரியர் இல்லாதபோது தன் சிங்கப்பூர்  மாமா வின் புகழ்களையும் . தான் திருப்பதி சென்று வந்த அனுபவங்களையும் , தனது சக தோழிகளிடம் அடுக்க   ஆரம்பித்துவிடுவாள் ...! ஆனால்  அவளுடைய பெயரை மட்டும் நான் குற்றப்பத்திரிக்கையில் எழுதாமல் என்   அன்பை வெளிப்படுத்துவேன்...!குழிகள் குவிய சிரிப்பாள் ...!குதூகலத்தில் மிதப்பேன்..! எனக்கெதிராக வகுப்பு மாணவர்கள் ஒரு புரட்சி படையே தொடங்கினார்கள் ...!

என் பாட்டியின் மடியில் படுத்து பார்க்கும் ஒவ்வொரு படங்களிலும் வரும் காதல் காட்சிகளை அர்த்தமே தெரியாமலும் கூட ரசித்தேன் ..! சில படங்களில்
தன் காதலை கதாநாயகர்கள் காகிதத்தில் எழுதி ராக்கெட் பறக்க விடுவதை மனதில் ஏற்றி சோதனைக்கு தயாரானேன் ..!

பள்ளி முடிந்து வீடு செல்லும் வழியில் , யாரும்  இல்லாத நேரத்தில் ,
சரியான முறையில் ராக்கேட்டை மடித்து , சிறு நடுக்கத்துடன் , கைகளில் முறையே பொருத்தி , அவளை நோக்கி சரியான முறையில் செலுத்தினேன் ..!

உள்ளே நாலைந்து பாட்டு புத்தகங்களின் பாடல் வரிகளும், ஐ லவ் யூ ..என்ற வாசகத்தையும் எழுதியிருந்தேன் , உபயம் :பக்கத்துக்கு வீட்டு அண்ணன்..!

என் தொழில் நுட்பம் தோற்கவில்லை , சீரான வேகத்தில் பறந்த  ராக்கெட் , எனக்கு அவளிடம் மிகவும் பிடித்த கூந்தலை அடைந்து சிக்கிக்கொண்டது..!

ஏதோ அவள் தலையை மோதிவிட்டது என்ற பரபரப்பில் அவள் தன கூந்தலில் சிக்கியதை வேகமாக பிடித்து இழுத்தாள் ...!என்னை நோக்கி திரும்பினாள் ...!............................................................................................................................................................................................................................................................................................................................................... அவளது கூந்தல் , அழகு கூந்தல் , சிக்கிய ராக்கெட்டுடன் தரையில் கிடந்தது ...! என் ஆறாவது அறிவு அது ஒட்டு முடி என்பதை உணர ஆரம்பித்தது ...!..............................................................................................................................................................................ராக்கெட்டை விட வேகமாக ஓடினேன்...!  திருப்பதிக்கு மொட்டை போட்டிருக்கின்றாள் ...! அவளது நம்பிக்கையில் அவள்  வேண்டுதலை நிறைவேற்றிய அவளது கடவுள் , என் கனவில் ஓட்டை போட்டுவிட்டார்...!

                                                                                                            -கா .வாசிம் அகமது

Thursday 8 August 2013

கிராமத்து காதல் பாட்டு :

கிராமத்து   காதல் பாட்டு :

சூரியனும் ஒளிஞ்சிடுச்சு  -வெட்கப்பட்டு ,
உன்னை தொட வந்த தூறலும் நீ குடை விரிச்சதால்-துக்கப்பட்டு ,
வெள்ளமா  சேர்ந்து வந்து உன் கால் தொடவே -கஷ்டப்பட்டு 
நீ துள்ளி துள்ளி  ஓடியதால் தன்னை புதைசிடுச்சு -நஷ்டப்பட்டு ............!

உன் கை இடுக்குல நாணத்தையும் , உன் கால் இடுக்குல நடுக்கத்தையும்  
காமிக்கிறே எனக்காகத்தான் ......!
என் பாதையிலே பக்குவத்தையும் .பார்வையிலே பத்தியத்தையும் 
சேமிக்கிறேன் உனக்காகத்தான் ......!

நீ  கூந்தல் குதிக்க நடக்கயிலே  என் குருதிக்குள்ள சுனாமி ...,
உன்  ஓரக்கண்ணு  பார்வைக்கு நான் ரகசிய பினாமி .....
சந்தைக்கு நீ போகையிலே காய் கனி  எல்லாம் பூவா மாறி  தூவுது ....,
 கடைவீதி   நீயும் போனா வளையல் உன் கைய சேர ஏங்குது ........!

(உன் கை இடுக்குல)

நீ நிலவா பல்லைக்காட்டி சிரிக்குற ..,
நான் ஆழி அலையப்போல கொதிக்கிறேன் ....!
நீ சற்று தலை நிமிர்த்தி என்னைப்பார்த்தால் கூட .....,
நான் வான வேடிக்கையா வெடிக்கிறேன் .....!

நீ காந்த துண்டு ,நான் இரும்பு குண்டு .......,
உன்ன நோக்கி இழுக்குற...........!
நீ கதிர் அருவா  , நான் கம்பங்கதிரு .....
என்ன சறுக்கு சறுக்குனு அறுக்குற........!

நீ கைகாட்டும் திசைய நோக்கி விரைந்து போகும் என் காலு வண்டி ....!
தைரியமா வந்து ஏறிக்கடி காலம் முழுசும் நான் கேரண்டி டி ..........!

(உன் கைஇடுக்குல )

(சூரியனும்) 
                                                                                                          -கா.வாசிம் அகமது