Saturday 9 March 2013

"காதல் சோறு "

பீசில்லா பிரியாணி குஸ்கா....!
அடி நீ இல்லா  என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப ரிஸ்கா ...!

என் பல்லில் சிக்கிய கறி துண்டே ....,
என் தொண்டையில் குத்திய மீன் முள்ளே ...,
என் நாக்கில் கரையும் கற்கண்டே ....,
நான் உன்னை சுற்றும் சிறு வண்டே ...!

என்னை  சுருட்டி அடைக்கிற "ஷவர்மா வா ...,
தட்டி எடுக்குற புரோட்டாவா ....,
என்னை திருப்பி போடுற தோசையா ,,,
உன் மேல எனக்கு ஆசையே ,...!

பீசில்லா பிரியாணி குஸ்கா....!
அடி நீ இல்லா  என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப ரிஸ்கா ...!

குத்துற என்னை "தந்தூரியா ...
சுத்துற என்னை க்ரில் சிக்கனா ...
சிதைக்கிற என்ன பொடிமாஸா ...
வறுக்குற  என்னை கருவாடா ....!

பீசில்லா பிரியாணி குஸ்கா....!
அடி நீ இல்லா  என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப ரிஸ்கா ...!
                                                                                                                           --நான்தான் 

Friday 1 March 2013

நீராடும்பொழுது

அஞ்சினேன் ., தன்னம்பிக்கை கொண்டேன் , தலை நிமிர்ந்தேன் , போர்குணத்தை அறிந்தேன் , 
என்னைக்கண்டு வியந்து பெருமிதம் அடைந்தேன் , மாவீரனாக உணர்ந்தேன் ....!
#அதிகாலை குளிர்நீரில் நீராடும்பொழுது ,,.....!- கா.வா

ஈழத்தில் ஒரு காதலர்களின் கவிதை :

ஈழத்தில் ஒரு காதலர்களின் கவிதை :
முத்தமிட ஆசைதான், ஆனால் யுத்தத்தின் சத்தத்தில் முத்தம் எதற்கு ....,
ஊடல் செய்ய ஆசைதான் , ஆனால் யுத்தம் முடிந்த பின் கூடலே இருக்காதே ....,
எந்த தந்தைக்கு தன் சந்ததியை ரத்தக்குளத்தில் நீந்தவிட ஆசை உண்டு.....,!
ஆனாலும் உன்னுடன் இணைகிறேன் ,
என் இனத்துக்காக போரிட ஒரு ஆணும், தாய் பாலிட ஒரு பெண்ணும் தேவை என்பதற்காக....!
-கா.வாசிம் அகமது

பதிவு செய்யப்படாத பெட்டி

பதிவு செய்யப்படாத பெட்டி :unreserved compartment:
யாரோ ஒரு தாத்தாவிற்காக கால் கடுக்க நிற்கும் இளைஞன் ,
ரஹீமாவின் மடியில் உறங்கும் லட்சுமியின் குழந்தை ,
தன் மருமகள் கொடுமைகளை ஒப்பிட்டு பார்க்கும் மாமியார்கள்,
இசைஞானியும் இசைப்புயலும் உரக்க ஒலிக்கும் சீனா அலைபேசிகள்,
இங்கு பிரியானியும் ,தயிர்சாதமும் ஒன்றிணைந்து பகிர்ந்துண்ணும் பண்பை மிச்சம் வைக்கும் ,
இது தமிழகத்தில் தன்னை இன்னும் பதிவு செய்யாதவர்களின் பெட்டி ....!